விலங்குகளின் உடல் உஷ்ண அதிகரிப்பு காரணமாக விலங்குகளுக்கு மன அழுத்தம் மற்றும் நீர் பயம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
விவசாய கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் இந்த காலகட்டங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கோழிகள் முட்டையிடுவது குறைவதுடன், நாளொன்றுக்கு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் அளவும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, வீடுகள் மற்றும் பண்ணைகளில் கால்நடைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்குதல், கால்நடைகளுக்கு காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கால்நடைகளை வளர்த்தள், கால்நடைகளுக்கு தேவையான விட்டமின்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.