தேர்தலை ஒத்திவைக்க புதிய திட்டம்? 

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது, தேர்தலை ஒத்திவைப்பதற்கான செயற்பாடாகும் எனச் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் உரியத் தேர்தல் தொகுதியில் உள்ள வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கும், எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறை மூலம் தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்றவாறு தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கடந்த காலங்களில் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் ஊடாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமையை பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடக சந்திப்பொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முறைமையில் மேற்குறிப்பிட்டவாறு மாற்றம் செய்வதன் ஊடாக, தேர்தல் அதிகாரிகளுக்கு எல்லை நிர்ணய செயன்முறையை மேற்கொள்வதற்குக் கால தாமதம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், உரியக் காலத்தில் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply