அண்மையில் வெளியாகியிருந்த குண்டூர் காரம் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீலீலாவின் நடனத்தை பற்றி இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஸ்வின் புகழ்ந்து பேசியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் யூடியூப்பில் இன்று வெளியிட்ட காணொளியில் பேசும் போது, நடிகை ஸ்ரீலீலாவின் நடனத்தை தான் மிகவும் இரசித்துப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் சார்ந்த விடயங்களை பற்றி பகிர்வதற்கு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அஸ்வின், திரையுலகம் சார்ந்த விடயங்களையும் அவ்வப்போது பேசி வருகின்றார்.
மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகியிருந்த குண்டூர் காரம் திரைப்படத்தில், மகேஷ் பாபுவை விட ஶ்ரீலிலா சிறப்பாக நடனமாடியிருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.