இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் இரு நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளது.
முதலாவது நிலஅதிர்வு 3.7 ரிக்டர் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் இரண்டு மணி நேரங்களின் பின்னர் 3.4 ரிக்டர் அளவில் மற்றுமொரு நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.