நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை பரிசாக வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.