யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் டிப்பர் வண்டி ஒன்றும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியுள்ளது.
இதன்போது வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்