இலங்கையில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்…

2024ம் ஆண்டிற்கான மகளிர் ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடைபெறவுள்ளது.  மகளிர் ஆசியக் கிண்ணம், தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும்  ஜூலை மாதம் 19ம் திகதி முதல் ஜூலை 28ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிகெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை மகளிர் ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையும்  ஆசிய கிரிகெட் சபையினால் இன்று(26) வெளியிடப்பட்டுள்ளது. தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் இரு குழாமாக பிரிக்கப்பட்டுள்ளன. 

குழாம் A: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாளம் 

குழாம் B: இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து 

இலங்கையில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்...

Social Share

Leave a Reply