ஹட்டன் லெத்தன்டி பகுதியில் நடைபெற்ற மதுபானம் அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர், போட்டி நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.
கணேசன் ராமச்சந்திரன் எனும் 39 வயதுடைய பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவின் பின்னர் இளைஞர்கள் சிலர் விரைவாக மதுபானம் அருந்தும் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த போட்டியில் பலர் கலந்து கொண்டிருந்த நிலையில், போட்டியாளர்களுக்கு 750ml மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த மதுபானத்தை குறைந்தளவு நேரத்தில் அருந்தும் நபர் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
போட்டியை முதலாவதாக நிறைவு செய்த நபர், போட்டி நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.
போட்டியில் பங்குபற்றிய மற்றுமொரு நபரும், திடீர் சுகவீனத்தின் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்து நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, நிமோனியா மற்றும் உணவு தொண்டையில் சிக்கிக் கொண்டமையால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதி பரிசோதனைகளுக்காக, உயிரிழந்த நபரின் உடல் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.