சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் டெட் கொடுப்பனவை ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு வழங்குமாறு கோரியும், சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் இன்று(01) காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு அமல்படுத்தப்படுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் வைத்தியர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது உரிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாளை(02) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.