சட்ட ரீதியற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) வழங்கிய தீர்ப்பின் ஊடாக பாராளுமன்ற உறுபபினர் விமல் வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளிநாடு செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.