கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து
சிறுமி ஒருவர் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையிலிருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த சிறுமிக்கு 12 வயதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.