பாதுகாப்பை உறுதிப்படுத்த 15,000 அதிகாரிகள் கடமையில்

நாடளாவிய ரீதியில் தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள் உட்பட சுமார் 4,500 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பொலிஸார் 14,000 பேரும், விசேட அதிரடிப்படையினர் 500 பேரும்,  இராணுவ அதிகாரிகள் 400 பேரும் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 15,806 சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கு  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Social Share

Leave a Reply