விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் கணவன் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா – திஹாரிய பகுதியை சேர்ந்த இவர்கள் நீராடுவதற்காக சென்ற போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த பெண்ணிற்கு 22 வயது என்பதுடன் அவரது கணவனுக்கு 28 வயதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காணாமற்போன நபரை தேடும் முயற்சியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.