இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் தீக்கிரையாகியுள்ளது.
பண்டாரவளை ஹல்பே பகுதியில் அவர் காரில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனையடுத்து, பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சருக்கும் சாரதிக்கும்
காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.