சுயதொழிலில் ஈடுபடுவோருக்கான மகிழ்ச்சி செய்தி

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுயதொழில் செய்வோருக்கான ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னதாகவே நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply