இலங்கையின் பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் குறைவடைந்துள்ளது.
மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்படி, பெப்ரவரி மாதத்தில் 5.1 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் மார்ச் மாதத்தில் பணவீக்க வீதம் 2.5 வீதமாக குறைவடைந்துள்ளது.
உணவு அல்லாத பணவீக்க வீதம் பெப்ரவரி மாத்தில் 5.1 வீதமாக பதிவாகியதுடன் மார்ச் மாத்தில் 0.7 வீதமாக பதிவாகியுள்ளது.
மின் கட்டணம் பெருளவு வீதத்தினால் குறைக்கப்பட்டமையே பணவீக்க குறைவிற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.