வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுள்ளார்.
வவுனியாவில் இன்று(23.04) பதிவாகிய இந்த சம்பவத்தில், குறித்த பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவை காப்பாற்ற வைத்தியர்களினால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும், குறித்த முயற்சி பலனளிக்கவில்லை.
மதவாச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், அவருடைய சிசுவுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.