கொழும்பிலுள்ள தூதரகத்தில் கடவுச்சீட்டுகளை மீளப்பெற்றுக்கொள்ளல் மற்றும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து இந்த நேரசூசி நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
இதன்படி, குடியேற்ற வீசாவிற்கு விண்ணப்பித்தோர் தமது கடவுச்சீட்டுகளை செவ்வாய் கிழமைகளில் பிற்பகல் 03 மணிக்கு மாத்திரமே திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
கொன்சியுலர் பிரிவிற்கான ஆவணங்கள் அனைத்தும் புதன்கிழமைகளில் பிற்பகல் 03 மணிக்கு மாத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குடியேற்ற வீசா அல்லாத ஏனைய வீசாக்களுக்கு விண்ணப்பித்தோர் தமது கடவுச்சீட்டுகளை வியாழக் கிழமைகளில் பிற்பகல் 03 மணிக்கு மாத்திரமே திரும்பப் பெறலாம்.