நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 74
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்காயிரத்து 472 பேர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் கீழ் 41 கிலோகிராம் ஹெரோயின்
மற்றும் 43 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் உள்ளிட்ட பல
போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.