ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில்
இன்று (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மற்றும் வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை மற்றும் இந்தியாவிலும்
இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதேவேளை,லெபனானிலும் 03 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.