ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவித்த நாமல் 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இரங்கல் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்று இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி ரீஸா டெல்கோஷ் சந்தித்து நாமல் ராஜபக்‌ஷ தன்னுடைய இரங்கலை வெளிப்படுத்தினார்.

ஈரான் ஜனாதிபதியின் மரணத்தையறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

Social Share

Leave a Reply