ஜனாதிபதி தேர்தலே இந்த வருடத்தில் முதலாவதாக நடைபெறுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22.05) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பு அமைவாக ஜனாதிபதி தேர்தலே நடாத்தப்படும் எனவும், அதற்கான நிதி தேர்தல் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுளளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களம் ஏற்கனவே செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குமிடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென அறிவித்துள்ளது. அவ்வாறு தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் ஜூலை கடைசியில் தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.