தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளார்.
31 வயதுடைய குறித்த நபர், வைத்திய சாலையின் 17வது அறையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு Cefuroxime எனும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பங்களாதேஷின் Opsonin Pharma Limited எனும் நிறுவனம் தாயரிக்கும் Cefuroxime தடுப்பூசியின் VLL040 எனும் தொகுதி தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தடுப்பூசியின் கடுமையான எதிர்வினையின் காரணத்தை கண்டறிய மருத்துவமனை மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.