எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் சிற்றுண்டிச் சாலைக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் இலஞ்சம் பெற முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் குறித்த அதிபர் அவரது பாடசாலை அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் சிற்றுண்டிச் சாலைக்கு உணவு வழங்கும் பெண்ணிற்கு வழங்கப்பட வேண்டிய கடந்த மாதங்களுக்காக பணத்தை விடுவிக்க சிபாரிசு செய்வதற்காக 50,000 ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குறித்த பெண்ணினால் பாடசாலை அதிபருக்கு 20,000 ரூபா இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 30,000 ரூபா இலஞ்சமாக கோரப்பட்ட போது, வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சந்தேகநபரான பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.