நாட்டின் பல பகுதிகளில் 350 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் சிறியளவிலான மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்பட கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.