எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை – ஜனாதிபதி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இளம் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற What’s New சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டத்தன் பின்னர் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதுதான் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரம். பாராளுமன்றமே உச்சமானது.

அமெரிக்க அமைப்பு வேறு. அமெரிக்க அமைப்பில், அவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, ஜனாதிபதிக்கும் நிறைவேற்று அதிகாரங்களையும், காங்கிரசுக்கும் சட்டமன்ற அதிகாரங்களையும், நீதிமன்றங்களுக்கு நீதித்துறை அதிகாரங்களையும் வழங்கினர்.

நமது நாடு சமஷ்டி முறையை பின்பற்றாததால் ஆங்கிலேய முறையை கடைபிடிக்கிறோம். இந்தியா ஒரு சமஷ்டி நாடாக இருந்ததால் சமஷ்டி முறைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் நாம் ஒரு சமஷ்டி நாடு அல்ல. நமது நாட்டில் சட்டம் இயற்றும் இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

இலங்கையில் பல ஆட்சி முறைகள் இருந்தன. ஒன்று ஆங்கிலேயர் கால முறைமை மற்றையது அதன்படியே அமைச்சரவை செயற்படுகிறது. மற்றையது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. சட்டமியற்றும் அதிகாரங்கள் சட்டவாக்க சபையிடம் உள்ளது. அதன்படி ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்து தெரிவாகும் போது, சட்டவாக்க சபைக்கு மற்றொரு கட்சியிலிருந்து உறுப்பினர்கள் தெரிவாகலாம்.

சுவிட்சர்லாந்தின் பாராளுமன்ற முறையில், பாராளுமன்றத்தால் சமஷ்டி செயற்குழுவினால் ஏழு பேர் நியமிக்கப்படுவர். நிறைவேற்று அதிகாரம் சமஷ்டி சபையிடம் காணப்படும்.

அந்நாட்டு முறைமைக்கமைய இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா இரண்டு ஆசனங்கள் வழங்கப்படும். ஏனைய கட்சிகளுக்கு ஒரு ஆசனம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். அவ்வாறு நியமிக்கப்பட்டும் உறுப்பினர்கள் நிறுவனங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டே நிறைவேற்று அதிகாரத்தையும் செயற்படுத்துவர். அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை, அந்த ஏழு பேரில் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்பர்.

மற்றைய முறை இலங்கையில் இருந்த டொனமோர் முறை. அந்த அமைப்பில், நிர்வாக அமைப்பு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் சபாநாயகராக செயல்பட்டார். அந்த ஏழு பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் அமைச்சராக பதவியேற்றார். அந்த அமைச்சர்களில் ஒருவர் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மூன்று செயலாளர்களை ஆளுநர் நியமித்தார். அமைச்சர்கள் குழு, பத்து பேரைக் கொண்டது. இந்த பத்து பேரில் தலைமைச் செயலாளர் தலைவராக செயல்பட்டார். இந்த நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பிறகு பிரான்ஸ் முறைமை வந்தது. அதன் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மக்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். இந்த முறையே இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் சாதக பாதகங்கள் இரண்டுமே உள்ளன. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வகித்து நாட்டுக்கு பெரும் பணி ஆற்றியுள்ளார். மகாவலி, சமனல குளம், லுணுகம்வெஹர போன்ற பாரிய திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டன. கோட்டே தலைநகராக மாற்றப்பட்டது. இரண்டு வர்த்தக வலயங்கள் நிறுவப்பட்டன. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் 11 வருட யுத்தத்திற்கு மத்தியில் செயற்படுத்தப்பட்டவையாகும்.

Social Share

Leave a Reply