உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகாரிகளினால் புறக்கணிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ந்தம் நீதிக்கான போராட்டங்கள் தொடரும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களாக பூரண குணமடையாமல் அவதிப்பட்டு வந்த திலினா ஹர்ஷ்னி எனும் பெண் கடந்த 27ம் திகதி உயிரிழந்த நிலையில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னரே கர்தினால் மல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.