மைத்திரியின் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திர குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதற்கமைய குறித்த மனு இன்று(30.05) நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Social Share

Leave a Reply