தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள்
இந்நிலையில் இதனை நினைவு கூரும் வகையிலான நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று (01.06) இடம்பெற்றது.
யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இடம்பெற்ற வன்முறைகளில் உயிரிழந்தவர்களுக்காக தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்கிழக்காசியாவின் மிக பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி திட்டமிட்டு
எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.