பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் விலைச் சூத்திரத்திற்கமைய பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரு சந்தர்ப்பங்களில் டீசலின் விலை தொடர்ச்சியாக குறைக்கப்பட்ட போதிலும் அதன் வீதம் 2 .8 ஆகவே காணப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணங்களை குறைப்பதாயின், அந்த வீதம் 04 அல்லது அதனை விடவும் அதிகமாக இருக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
தலைவர் சஷி வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

விலைச் சூத்திரத்திற்கு அமைய, இம்மாதம் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நிலையில் பஸ்களுக்கான உதிரிப்பாகங்களின் விலை குறைவடைந்தமை, டீசல் விலை குறைவடைந்தமை உள்ளிட்ட 12 விடயங்களை கவனத்திற்கொண்டு பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply