பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இலங்கை கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில வருடங்களுக்கு முன்னர் 330,000 காணப்பட்ட வருடாந்த பிறப்பு வீதம், தற்போது 300,000ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் கல்வி முறையின் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதால் பாடசாலைக் கல்வி முறையில் இருந்து விலகி, மேலதிக வகுப்புகளை நோக்கி மாணவர்கள் ஈர்க்க படுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே மாணவர்களிடையே நாட்டின் கல்வி முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.