மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் 88.7 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 19 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ளது. 

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத இறுதிக்குள் 91.2 பில்லியன் ரூபாவை வரி வருமானமாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இலக்கில் இதுவரை 98 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply