சஜித்துடன் கைக்கொடுத்தார் அங்கஜன்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பிரபஞ்சம்’ ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் 228 ஆவது கட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், பருத்தித்துறை கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை இன்று(10.06) வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.

Social Share

Leave a Reply