இலங்கையின், 2024ம் ஆண்டிற்கான மேஜர் கழக ஒருநாள் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 18 அணிகள் பங்குபற்றும் இந்த தொடரில் A மற்றும் B குழாம்களில் தலா ஒன்பது அணிகள் இடம் பெற்றுள்ளன.
தொடரின் முதல் போட்டியில் Negombo Cricket Club மற்றும் Ace Capital Cricket Club அணிகளுக்கிடையில் நடைபெற்றது. களுத்துறையில் கடந்த 10ம் திகதி நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Negombo Cricket Club அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, Negombo Cricket Club அணி 35.2 ஓவர்களில் 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. Ace Capital Cricket Club அணி சார்பில் பந்துவீச்சில் தனுகா தாபரே 6 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.
116 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலக்கு துடுப்பெடுத்தாடிய Ace Capital Cricket Club அணி 33.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக DLS முறைப்படி Ace Capital Cricket Club அணி 22 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
பாணந்துறையில் நடைபெற்ற Bloomfield மற்றும் Panadura அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Panadura அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Bloomfield அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டியை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
காலியில், Ragama Cricket Club மற்றும் Chilaw Marians Cricket Club அணிகளுக்கு இடையிலான போட்டியில் Ragama Cricket Club அணி வெற்றியீட்டியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Chilaw Marians Cricket Club அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, Chilaw Marians Cricket Club அணி 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Ragama Cricket Club அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
மக்கோனவில் நடைபெற்ற Kurunegala Youth Cricket Club அணிக்கு எதிரான போட்டியில் Badureliya Sports Club அணி 137 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kurunegala Youth Cricket Club அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Badureliya Sports Club அணி விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சதீப் கவிஷ்க 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
179 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Kurunegala Youth Cricket Club அணி 41 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. Badureliya Sports Club அணி சார்பில் பந்துவீச்சில் அசங்க சில்வா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதேவேளை, மேஜர் கழக ஒருநாள் தொடரில் Burgher Recreation Club மற்றும் Colombo Cricket Club அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Colombo Cricket Club அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Burgher Recreation Club அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Cricket Club அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. Colombo Cricket Club அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க 62 பந்துகளில் 122 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
கொழும்பில் நடைபெற்றிருந்த மற்றுமொரு போட்டியில் Kandy Customs Cricket Club மற்றும் Moors Sports Club அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kandy Customs Cricket Club அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. போட்டியின் ஆரம்பத்தில் மழைக் குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய Moors Sports Club அணி 4 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சோஹான் டி லிவேரா 79 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
263 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Kandy Customs Cricket Club அணி 21.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக DLS முறைப்படி Moors Sports Club அணி 66 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
Police Sports Club மற்றும் Nugegoda Sports Welfare Club அணிகளுக்கு இடையிலான போட்டியும் மொறட்டுவையில் கடந்த 10ம் திகதி நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Nugegoda Sports Welfare Club அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Police Sports Club அணி 8 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Nugegoda Sports Welfare Club அணி 37 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
2024ம் ஆண்டிற்கான மேஜர் கழக ஒருநாள் தொடரின் Tamil Union Cricket Club அணிக்கு எதிரான போட்டியில் Nondescripts Cricket Club அணி வெற்றி பெற்றது. கொழும்பில் நேற்று(11.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Tamil Union Cricket Club அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Nondescripts Cricket Club அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நிரோஷன் திக்வெல்ல 112 ஓட்டங்களையும், லஹிரு உதார 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Tamil Union Cricket Club அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன்படி, இந்தப் போட்டியில் Nondescripts Cricket Club அணி 228 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது.
2024ம் ஆண்டிற்கான மேஜர் கழக ஒருநாள் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் A குழாமில் Nondescripts Cricket Club அணியும், B குழாமில் Colombo Cricket Club அணியும் தரவரிசையில் முதலிடங்களில் உள்ளன.
