யாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்த சிலர் உடைமைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(13.06) அதிகாலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட இனந்தெரியாத நபர்களே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.