கரையோர மார்க்கத்தில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
பாணந்துறை ரயில் நிலையத்தை அண்மித்து இன்று(13.06) முற்பகல் ரயிலொன்று தடம்புரண்டதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.