பொலிஸ் அதிகாரிகளுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு 

போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 1,600 ரூபா மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய சுற்றறிக்கை பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்படவுள்ளது.

மேலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 2,500 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply