இலங்கையில் பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி 20.4 சதவீதம் பெண்கள் தங்கள் நெருங்கிய துணையால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு (WWS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் (20.4%) நெருங்கிய துணையால் உடல் அல்லது பாலியல் ரீதியாக வன்முறையை எதிர்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
எனினும் பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் அரைவாசி (49.3%) பேர் முறையான சட்ட உதவியை நாடவில்லை என்றும் குறித்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.