கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய இன்று (25/11) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விபத்துக்குள்ளான மிதப்பு படகின் உரிமையாளர் உட்பட 3 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.