இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்று (25/11) பாராளுமன்ற அமர்வின் போது கையளித்தார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கு இடையிலான இலங்கைக்கான தூதுவராக பதவியேற்கும் நோக்கிலேயே அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இவர் இலங்கை சோசலிசக் குடியரசின் 7ஆவது பாராளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராவார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தொழில்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சராகவும் நியமனம் பெற்றிருந்தார்.

இவர் 1980 தொடக்கம் 15 வருடக்காலப்பகுதியில் ஐ.நாவின் முக்கிய உறவுகளில் பதவி வகித்தார். மேலும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டிருந்தாலும், மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராவார்.

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP

Social Share

Leave a Reply