புதிய மைல்கல்லை நெருங்கும் சுற்றுலாத்துறை 

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்குள் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் படி, இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் 69,825 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 966,825 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  

Social Share

Leave a Reply