பொசன் போயா தினத்தை முன்னிட்டு மன்னாரில் தன்சல்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு இன்று காலை (21/06) பாண் தன்சல் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் இதனை ஏற்பாடு செய்திருந்தன.

குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.எஸ்.ஏ.சந்திரபால   வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததோடு
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் , மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி பிரசாந் ஜெயதிலக்க மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களுக்கு தாகசாந்தி வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply