ஹஜ் யாத்திரை: 1,300 அதிகமான யாத்ரீகர்கள் உயிரிழப்பு 

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமான முறையில் பங்கேற்ற யாத்ரீகர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர்களில் சுமார் 83% பேர் ஹஜ் பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதிகளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும், குறித்த நபர்பகளில் பெரும்பாலான யாத்ரீகர்கள் நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 500,000 பேருக்கு சவுதி அரேபியா சுகாதாரத் துறையினர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் சுமார் 140,000 பேர் சட்டவிரோத யாத்ரீகர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply