இலங்கை U19 இளைஞர் லீக்: 4 தமிழர்கள், ஒரு இஸ்லாமியருக்கு வாய்ப்பு  

19 வயதுக்குட்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான, யூத் லீக் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டிற்கான யூத் லீக் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இம்முறை யூத் லீக் தொடரில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, தம்புள்ளை, கண்டி மற்றும் காலி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5 அணிகளில் தலா 15 வீரர்கள் என்ற அடிப்படையில் 75 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தம்புள்ளை அணியில் நிஷாந்தன் அஜய், விக்னேஷ்வரன் ஆகாஷ், ரஞ்சித்குமார் நியூட்டன், சுதர்சன் சுபர்ணன் ஆகிய 4 யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களும், கொழும்பு அணியில் மொஹமட் முர்ஷித் எனும் இஸ்லாமிய வீரரும் இடம்பெற்றுள்ளனர். அதற்கமைய யூத் லீக் தொடரில் 5 சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வலைப் பந்து வீச்சாளராக பங்கேற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குகதாஸ் மாதுலன் இந்த தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவனான குகதாஸ் மாதுலனின், பாடசாலை வரவு குறைவாக காணப்படுகின்றமையினால், யூத் லீக் தொடரில் பங்கேற்பதற்கான அனுமதியை பாடசாலை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை U19 இளைஞர் லீக்: 4 தமிழர்கள், ஒரு இஸ்லாமியருக்கு வாய்ப்பு  

Social Share

Leave a Reply