லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று(02.07) இரண்டாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ், கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
199 ஓட்டங்கள் என்ற பெரிய வெற்றியிலக்கை துரத்தியடித்த கண்டி பல்கோன்ஸ் அணி வேகமான ஆரம்பம் ஒன்றை பெற்றது. 12 பந்துகளில் 24 ஓட்டங்களை பெற்ற வேளையில் டுனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 37 ஓட்டங்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம். இரண்டாவது விக்கெட்டையும் டுனித் கைப்பற்ற கண்டி அணியின் தடுமாற்றம் ஆரம்பித்தது. மொஹமட் ஹரிஸ் 04(03) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் சிறப்பாக டினேஷ் சந்திமால் துடுப்பாடிய போதும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 74 ஆக காணப்பட்ட வேளையில் ஏழாவது ஓவரின் இறுதிப் பந்தில் 38(26) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். க்ளன் பிலிப்ஸ் அவரின் விக்கெட்டை கைப்பற்றினார். சிறிது இடைவேளையில் கமிந்து மென்டிஸ் 07(11) ஓட்டங்களுடன் ஷதாப் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முன் வரிசை விக்கெட்களை கைப்பற்றிய நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் துடுப்பாடும் வேளையில் இந்த வருட LPL இல் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதீச பத்திரன பத்தாவது ஓவரில் அழைக்கப்பட்டார். அவரின் முதலாவது ஓவர் கைகொடுக்காத நிலையில் அஞ்சலோ மத்தியூஸ், வனிந்து ஹசரங்க ஜோடி அதிரடி நிகழ்த்தி கொழும்பு பக்கமாக சென்ற போட்டியை தமது பக்கமாக மாற்றினார்கள். இருவரும் 60(31) ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். பினுர பெர்னாண்டோ வீசிய பந்தில் அஞ்சலோ மத்தியூஸ் 25(20) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ஷதாப் கானின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 25(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தனது முதலாவது பந்தில் அஹா சல்மான் , ஷதாப் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க கண்டி அணியின் தோல்வி உறுதியானது. பவான் ரத்நாயக்க முதற் பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் அடுத்தடுத்து விக்கெட்டை கைப்பற்றி கொழும்பு அணியின் வெற்றியை உறுதி செய்தார். தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகேயின் பந்தில் 05(03) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த கண்டி அணி 147 ஓட்டங்களை பெற்று 51 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் டுனித் வெல்லாளஹே 3.5 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றினார். ஷதாப் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்களை கைப்பற்றினார். பினுர பெர்னாண்டோ 3 ஓவர்களில் 23 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை வீழ்த்தினார். க்ளன் பிலிப்ஸ் 2 ஓவர்களில் 28 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் இழந்து தடுமாறிய கொழும்பு அணியை முஹமட் வசீம், சதீர சமரவிக்ரம ஜோடி மீட்டு எடுத்தது. இருவரும் 78(37)ஓட்டங்களை பகிர்ந்தனர். ஒன்பதாவது ஓவரில் வனிந்து ஹசரங்க வஸீமினின் விக்கெட்டை கைப்பற்றி இணைப்பாட்டத்தை முறியடித்தார். வசீம் 32(18) ஓட்டங்களுடன் வெளியேறினார். இரண்டு பந்துகளை எதிர்கொண்ட க்ளன் பிலிப்ஸ் வனிந்துவின் பந்துவீச்சில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். இதன் மூலம் அதிரடியாக சென்ற கொழும்பின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. சதீர சமரவிக்ரம 48(26) ஓட்டங்களை பெற்ற வேளையில் அஹா சல்மானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆறாவது விக்கெட்டுக்காக இணைந்த திசர பெரேரா, ஷதாப் கான் இணைந்து 38 ஓட்டங்களை பெற்று மீண்டும் கொழும்பு அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஷதாப் கான் 20(17) ஓட்டங்களை பெற்ற நிலையில் கஸூன் ரஜித்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திசரவுடன் ஜோடி சேர்ந்த சாமிக்க கருணாரட்ன அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார். இறுதி ஓவரில் தஸூன் சாணக்கவின் பந்துவீச்சில் திசர பெரேரா 38(30) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சாமிக்க கருணாரட்ன 25(10) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 17(10) ஓட்டங்களையும், ஷெவோன் டானியல் 03(05) ஓட்டங்களையும் பெற்றனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை வீழ்த்தினார். அஹா சல்மான் 2 ஓவர்களில் 10 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். கஸூன் ரஜித்த 3 ஓவர்கள் பந்துவீசி 56 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். துஸ்மாந்த சமீர 4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். கமிந்து மென்டிஸ் 4 ஓவர்களில் 31 ஓட்டங்களை வழங்கினார். நேற்றைய போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றிய தஸூன் சாணக்க மூன்று ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். அவரின் ஒரு ஓவரை பாவிக்காமல் விட்டதும் கூட கண்டி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
கண்டி அணி நேற்று நடைபெற்ற தம்புள்ள சிக்சேர்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. கொழும்பு அணி வெற்றியோடு தொடரை ஆரம்பித்துள்ளது.
அணி விபரம்
கண்டி மூன்று மாற்றங்களை இன்றைய போட்டிக்காக செய்திருந்தது. சத்துரங்க டி சில்வா, மொஹமட் ஹஸ்னைன், சமத் கோமஸ் ஆகியோரை நீக்கி அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம்
அணி விபரம்
கண்டி மூன்று மாற்றங்களை இன்றைய போட்டிக்காக செய்திருந்தது. சத்துரங்க டி சில்வா, மொஹமட் ஹஸ்னைன், சமத் கோமஸ் ஆகியோரை நீக்கி அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம்