கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பினான அல்டேர்(Altair) கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் ஒரு ஆண் மாணவனும், பெண் மாணவி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்ததாகவும், அவர்களின் உடல்கள் 3 வது மாடியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவர்களும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் கட்டிடத்திலிருந்து குதித்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையிலும் ஏனைய காரணங்கள் தொடர்பிலும் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.