லாங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளின் இரண்டாம் போட்டி கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ், கோல் மாவல்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 07 ஓட்டங்களினால் வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. சகல அணிகளும் தலா இரண்டு போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் நாளை மறுதினம்(05.07) தம்புள்ளையில் அடுத்த கட்டப் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
180 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணி அவர்களது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெவோன் டானியலின் விக்கெட்டை வேகமாக இழந்தது. 07 ஓட்டங்களை அவர் பெற்றார். சிறிய இடைவேளையில் முஹமட் வசீம் 16(09) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறந்த ஆரம்பத்தை மேற்கொண்ட ரஹ்மனுள்ளா குர்பாஷ் 29(17) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் இழப்புகள் மூலம் கொழும்பு அணிக்கு இறுக்கமான நிலை ஒன்று ஏற்பட்டது. சதீர சமரவிக்ரம, க்ளன் பிலிப்ஸ் இணைந்து நல்ல இணைப்பாட்டத்தை ஏறபடுத்திய போதும் சதீர 16(17) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதி நம்பிக்கையாக இருந்த திசர பெரேரா 18(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க காலி அணி பக்கமாக வெற்றி வாய்ப்பு மாறியது. ஷதாப் கான் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழக்க காலி அணி பக்கமாக வெற்றி வாய்ப்பு முழுமையாக உறுதியானது. க்ளன் பிலிப்ஸ் 26(18) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். கொழும்பு அணி வெற்றி பெறாது என்ற நிலையில் டுனித் வெல்லாளகே தனித்து நின்று போராடினார். அவர் ஓட்டங்களை ஆட்டமிழ்ககாமல் பெற்றுக்கொண்டார். அவரோடு சேர்ந்து போராடிய சாமிக்க கருணாரட்ன 12(10) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இறுதியில் 20 ஓவர்களை எதிர்கொண்ட கொழும்பு அணி 09 விக்கெட்ளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
மஹீஸ் தீக்ஷண சிறப்பாக பந்துவீசி 04 ஓவர்களில் 20 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். ஷகூர் கான் 03 ஓவர்கள் பந்துவீசி 32/01 விக்கெட்டை கைப்பற்றினார். இசுரு உதான 04 ஓவர்கள் பந்துவீசி 34/02 விக்கெட்டை கைப்பற்றினார். ஷஹான் ஆராச்சிகே 03 ஓவர்கள் பந்துவீசி 21/02 விக்கெட்டை கைப்பற்றினார். மல்ஷா தருப்பதி 03 ஓவர்கள் பந்து வீசி 25/01 விக்கெட்டை கைப்பற்றினார்.
முதலில் துடுப்பாடிய காலி அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல அதிரடியாக துடுப்பாடி மிகச் சிறந்த ஆரம்பத்தை மேற்கொண்டார். 17 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். 71 ஓட்டங்களாக ஆரம்ப இணைப்பட்டாம் காணப்பட்ட வேளையில் பினுர பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஷதாப் கானின் பந்துவீச்சில் டிக்வெல்ல 50(18) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பானுக ராஜபக்ஷ முதற் பந்திலேயே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து காலி அணி கட்டுப்படுத்தப்பட்டது. ஜனித் லியனகே 02 ஓட்டங்களுடனும், ரிம் செய்பெர்ட் 05 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க 100 ஓட்டங்களை தாண்டுவார்களா ஏன்டா கேள்வி எழும்பியது. ஆனால் ஷகான் ஆராச்சிகே, இசுரு உதான ஜோடி அதிரடி நிகழ்த்தி அணியை மீட்டனர். 87 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். ஷகான் ஆராச்சிகே 35(27) ஓட்டங்களையும், இசுரு உதான 52(34) ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீசில் ஷதாப் கான் 4 (04 – 21/4)விக்கெட்களையும், பினுர பெர்னாண்டோ 2 (4- 22-3)விக்கெட்ளையும், மதீச பத்திரன 01 (04-22/4)விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அணி விபரம்
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, இசுரு உதான