LPL – யாழ், தம்புள்ளை போட்டியில் யாழ் அணி சிறந்த துடுப்பாட்டம்

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று(06.07) இரண்டாவது போட்டியாக ஜப்னா கிங்ஸ், தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

யாழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் இன்றும் சிறப்பாக அமையவில்லை. குஷல் மென்டிஸ் 18(12) ஓட்டங்களை பெற்ற வேளையில் முஸ்டபைசூர் ரஹ்மானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டுஸான் ஹேமந்தவின் பந்துவீச்சில் ரிலி ரொசவ் 12(11) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 62 ஆக அணியின் ஓட்ட எண்ணிக்கை காணப்பட்ட வேளையில் ஜோடி சேர்ந்த பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை அதிகரித்தனர். 100 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட வேளையில் பத்தும் நிஸ்ஸங்க 88(53) ஓட்டங்களை பெற்று நுவான் துஷாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சரித் அஸலங்க 13(06) ஓட்டங்களுடன் முஸ்டபைசூர் ரஹ்மான் ஆட்டமிழந்தார். அவிஷ்க பெர்னாண்டோ 57(30) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அஷ்மதுல்லா ஒமர்ஷாய் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் முஸ்டபைசூர் ரஹ்மான் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார். டுஸான் ஹேமந்த 4 ஓவர்கள் பந்துவீசி 39 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் துஷார 4 ஓவர்களில் 48 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். சமிந்து விஜயசிங்க ஒரு ஓவர் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி விக்கெட்டை கைப்பற்றினார்.

கொழும்பு அணி இரண்டவது வெற்றியை பெற்ற நிலையில் யாழ் அணி இரண்டாமணியாக இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. தம்புள்ளை அணி வெற்றிகளின்றி இறுதி இடத்தில் காணப்படுகிறது. யாழ் அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தனதாக்கும். தம்புள்ளை அணி வெற்றி பெற்றால் ஓட்ட நிகர சராசரி வேக அடிப்படையில் அவர்களது இடம் தீர்மானிக்கப்படும்.

இரு அணிகளுக்குமிடையில் கண்டியில் நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக பேபியன் அலன் நீக்கப்பட்டு ரப்ரைஸ் ஷம்ஸி இணைக்கப்பட்டுள்ளார். வியாஸ்காந்த் நீக்கப்பட்டு அஹான் விக்ரமசிங்கவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை அணியுடன் ரீஷா ஹென்றிக்ஸ் இணைந்துள்ளார். துஷான் ஹேமந்த, டில்ஷான் மதுசங்க ஆகியோரும் இணைந்துள்ளனர். டில்ஷான் நிமேஷ், அகில தனஞ்செய, தௌஹித் ரிதோய், ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான், ரப்ரைஸ் ஷம்ஸி

தம்புள்ள சிக்சேர்ஸ் – முஸ்டபைஸூர் ரஹ்மான்,தனுஷ்க குணதிலக, நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே துஷான் ஹேமந்த, டில்ஷான் மதுசங்க , ரீஷா ஹென்றிக்ஸ்,நுவான் துஷார

Social Share

Leave a Reply