ரணில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று(06.07) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாரா எனும் சந்தேகம் மக்களிடம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ருவான் விஜேவர்தன, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply