அனைத்து அரச சேவைகளும் 2 நாட்களுக்கு முடங்கும் சாத்தியம்  

அனைத்து அரச சேவைகளும் 2 நாட்களுக்கு முடங்கும் சாத்தியம் 200க்கும் மேற்பட்ட அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் நாளை(08.07) மற்றும் நாளை மறுநாள்(09.07) ஆகிய இரு தினங்களிலும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரச துறையிலுள்ள நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. 

இதேவேளை, இன்று(07.07) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

மேலும், எதிர்வரும் 9ம் திகதி மீண்டும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு  தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(06.07) அறிவித்திருந்தார். 

Social Share

Leave a Reply